'அப்படின்னா அவள் என் மகளே இல்ல'.. பெற்ற தாயே, தன் மகளுக்கு செய்த பரபரப்பு காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 19, 2019 10:47 AM

நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட திசையன்விளையில் வசித்துவரும் செல்வம், கலாவதி தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், கடைசி மகள் பள்ளியில் படிக்கிறார். இவர்களுள் இரண்டாவது மகள்தான், கல்லூரி பயிலும் 19 வயதான சுபா. செல்வம் 4 வருடங்களுக்கு முன்னர் காலமானார். சுபாவின் தாய் கலாவதி மட்டும் தனியே வசித்துவரும் நிலையில், சுபா அண்மையில் மகேஷ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

mother makes a funeral poster due to daughters love marr

இந்த நிலையில், திடீரென சுபா இறந்துவிட்டதாக, அவரது புகைப்படத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர், ஊர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது கண்டு, சுபாவின் கணவர் கலாவதி அதிர்ச்சி அடைந்து, சம்மந்தப்பட்ட பிரிண்டிங் பிரஸ்ஸ்க்கு போன் செய்து விசாரித்துள்ளார். அப்போதுதான் சுபாவுக்கு மஞ்சள் காமாலை வந்து இறந்துவிட்டதாக, சுபாவின் தாயார் கலாவதி பணம் கொடுத்து போஸ்டர் அச்சடித்து ஒட்ட சொன்ன சம்பவம் தெரியவந்தது.

உடனே திசையன் விளை காவல் நிலையத்தில், சந்தோஷ் அளித்த புகாரின்படி, தன் 2வது மகள் சுபா பக்கத்து வீட்டு மகேஷ் என்பவரை காதலித்ததை, மகேஷின் நடவடிக்கை சரியில்லை எனச் சொல்லி, கலாவதி மறுத்துள்ளார். மீறி சுபா-மகேஷ் காதல் நடந்தது. இதனால் இரு குடும்பத்தாருக்கும் அடிக்கடி சண்டை நடந்தது. இதனைத் தொடர்ந்து மகேஷ் தனது குடும்பத்துடன் வேறு இடத்துக்கு வீடுகட்டிச் சென்றுவிட்டார்.

அதன் பின், சுபாவும், வீட்டை விட்டு வெளியேறி மகேஷை திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே மகேஷ்க்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், தன் மகள் மகேஷை திருமணம் செய்துகொண்ட ஆத்திரத்தில், கலாவதி, மேற்கூறியவாறு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டச் சொல்லி ஆர்டர் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பு: இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Tags : #MOTHER #DAUGHTER #LOVE #MARRIAGE