'ஜெயிலில் இருந்து தப்ப'... 'மகளை வைத்து, அப்பா செய்த காரியம்'... இப்டிகூடவா பண்ணுவாங்க?...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Aug 05, 2019 05:26 PM

சிறை கைதி ஒருவர், தன் மகளைப் போல உடை மற்றும மாஸ்க் அணிந்து வேடமிட்டு, தப்ப முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A Brazilian gang leader dressed up as his daughter to escape

பிரேசில் நாட்டு சிறையில் இருந்து தப்பிக்க புதிய முறை ஒன்றை கையாண்டிருக்கிறார் அங்குள்ள கேங் லீடர். பிரேசில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கிளாவினோ டா சில்வா. இவர் ஒரு கேங் லீடர் ஆவார். இவருக்கு 19 வயதில் மகள் உள்ளார். சில்வாவை அவரது மகள் சந்திக்க வருவது வழக்கம். அதுபோல் கடந்த சனிக்கிழமையன்று, அவரது மகள் தந்தையை பார்க்க வந்துள்ளார். ஆனால், அவரது தந்தை ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

திட்டமிட்டபடி, மகளைப் போலவே, உடை, மாஸ்க் மற்றும் விக் என அனைத்தையும் தயாராக வைத்திருந்த தந்தை, தன்னை பார்க்க வந்த மகளை சிறையின் கம்பிகளுக்கிடையே விட்டுவிட்டார். பின்னர் அவர் வைத்திருந்தவைகளை மறைவாக சென்று அணிந்துக் கொண்டு, வேறு வழியாக கிளம்ப முற்பட்டுள்ளார் தந்தையான சில்வா. ஆனால், போலீசார் அவரது செயல்களையும், மகளின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது முழுவதுமாக மகளைப் போலவே மாறிய கைதியான சில்வாவை, போலீசார்  மடக்கிப் பிடித்தனர். அதன்பின்னர் அவரது வேஷம் கலைக்கப்படும்போது போலீசார் வீடியோவும் எடுத்துள்ளனர். தப்பமுயன்ற கைதியான சில்வா, அன்று காலை முதல் பதற்றத்துடன் செயல்பட்டதே, அவர் மாட்ட காரணமானது என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, அதிக பாதுகாப்பு உள்ள தனிச்சிறையில் சில்வாவை மாற்ற உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : #PRISON #BRAZIL #SILVA #FATHER