'சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பால்'... 'இன்னும் ஒரு ஏரியாதான் அப்படி இருக்கு!'... 'வெளியான ஹேப்பி நியூஸ்!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 700க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரே பகுதி அல்லது ஒரே தெருவில் 5 நபர்களுக்கு மேல் தொற்று ஏற்பட்டால் அந்த பகுதிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுப்பாட்டு பகுதியும் குறைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சியில் மஞ்சப்பாக்கம் பகுதி மட்டும் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
