"நீங்க என்னிக்குமே எங்க மனசுல SUPER KINGS தான்... எல்லோருமே ஜெயிச்சுட முடியாது, ஆனா நிஜமான வீரர்கள்"... 'வைரலாகும் சாக்‌ஷியின் உருக்கமான பதிவு!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 26, 2020 11:09 AM

நீங்கள் எப்போதுமே எங்கள் மனதில் சூப்பர் கிங்ஸ்தான் என தோனியின் மனைவி சாக்‌ஷி உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Sakshi Dhoni Shares Emotional Post As CSK Miss Out On IPL Playoff Spot

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் நிலையில், தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றபோதும், ராஜஸ்தான் அணியும் மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் நடப்பு கிரிக்கெட்டில் இருந்து சென்னை அணி வெளியேறியுள்ளது.

Sakshi Dhoni Shares Emotional Post As CSK Miss Out On IPL Playoff Spot

இதன்முலம் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி வெளியேறுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தோனியின் மனைவி சாக்‌ஷி உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "இது ஒரு விளையாட்டு. நீங்கள் சிலசமயம் வெற்றி பெறுவீர்கள், சிலசமயம் தோல்வி அடைவீர்கள். மகிழ்ச்சியான வெற்றிகளுக்கும், வேதனையான தோல்விகளுக்கும் பல வருடங்கள் சாட்சியாக இருக்கின்றன.

Sakshi Dhoni Shares Emotional Post As CSK Miss Out On IPL Playoff Spot

இதில் ஒன்றை கொண்டாடுவோம், மற்றொன்றால் மனம் உடைந்து போவோம். சிலர் வெற்றி பெறுவர், சிலர் தோல்வி அடைவர், சிலர் தவறவிடுவர். யாரும் தோல்வி அடைய விரும்ப மாட்டார்கள். ஆனால் அனைவராலும் வெற்றி பெற முடியாது. நீங்கள் அப்போதும், இப்போதும் வெற்றியாளர்கள்தான். நிஜமான வீரர்கள் அவர்கள் விருப்பப்படி போராடுவதற்காக பிறக்கிறார்கள். நீங்கள் அனைவரும் எப்போதும் எங்கள் மனதில் சூப்பர் கிங்ஸ்தான்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sakshi Dhoni Shares Emotional Post As CSK Miss Out On IPL Playoff Spot | Sports News.