'அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு?!!'... 'பிரபல CSK வீரர் திடீர் முடிவு!!!'... 'வெளியான பரபரப்பு தகவல்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்த ஷேன் வாட்சன் சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், டி20 லீக்குகளில் மட்டுமே விளையாடி வந்தார். ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே முன்னேறியது.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றமளித்துள்ள நிலையில், வாட்சனும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி லீக்கில் விளையாடிய பின்னர், சிஎஸ்கே வீரர்கள் அறையில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வுபெற இருப்பதாக உணர்ச்சிவசப்பட்டவாறு ஷேன் வாட்சன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாட்சன் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் 2018ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூபபர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த வருடம் சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்பதும், கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து இறுதிப் போட்டிக்கு அணியை முன்னேற வைத்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
