'தமிழகத்தின் இன்றைய (24-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (24-10-2020) ஒரே நாளில் 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,06,136 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 31,787 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,94,901 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 287 பேருக்கும், செங்கல்பட்டில் 169 பேருக்கும், திருவள்ளூரில் 165 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 4,024 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,63,456 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 19 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்
