பாலிவுட்டை துரத்தும் போதைப்பொருள் விவகாரம்! ‘2 பாட்டில் கஞ்சா எண்ணெய் சிக்கியது’!.. 'தீபிகா படுகோனேவின் மேனேஜர் வீட்டில் நடந்த ரெய்டில் திடுக்கிடும் தகவல்கள்!!'
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணமடைந்த வழக்கு பற்றி விசாரித்து வரும் பொழுது பாலிவுட்டில் போதைப் பொருள் சப்ளை விவகாரம் பூதாகரமாகியது.

இதனையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை தனியாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதனடிப்படையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேனேஜர் ஜெயா சகா உடன் தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் சாட்டிங் செய்த தகவல் கிடைத்ததை அடுத்து நடிகை தீபிகா படுகோனேவிடமும், கரிஷ்மாவிடமும் கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.
இதேபோல், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரதா கபூர், சாரா அலி கான் உள்ளிட்ட நடிகைகளும் விசாரிக்கப்பட்டர். இந்த நிலையில் நேற்றைய தினம் மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள, தீபிகாவின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷின் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இரண்டு பாட்டில் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இந்த சோதனையின்போது கரிஷ்மா வீட்டில் இல்லை என்றும் அவர் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என்றும் தெரியவந்துள்ளது. அத்துடன் கரிஷ்மா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மற்ற செய்திகள்
