என்னையே குறி வைக்கிறார்கள்.. எத்தனை கேஸ் வேணுமானாலும் போடட்டும்.. எஸ்பி வேலுமணி டென்சன்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை: எனது குடும்பத்தினர், நண்பர்களை விசாரணை என்ற பெயரில் தினமும் அலை கழிக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அதிமுக அலுவலகத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற அதிமுக கொறடாவுமான எஸ்பி வேலுமணி விருப்ப மனுக்களை பெற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
`கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், சாலைகளைச் சீரமைக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம். நாங்கள் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் கோவைக்குத் தேவையான திட்டங்களைச் செய்திருக்கிறோம். மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கியது ஆரோக்கியமான செயல்.
அதேநேரத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கோவையில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த சாலைத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கோவை மாவட்டத்தை தி.மு.க புறக்கணிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. தி.மு.க அரசு சரியாகத் தூர்வாரி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே வெள்ளத்துக்குக் காரணம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நான் துணை நின்றேன். கடந்த 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர நானே காரணம். இதனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. எனது குடும்பத்தினர் நண்பர்கள் என பலரையும் விசாரணை என்ற பெயரில் தினமும் போலீஸ் அதிகாரிகள் அலைகழிக்கிறார்கள்.
என் மீது எத்த வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். கோவையில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" இவ்வாறு எஸ்பி வேலுமணி கூறினார்.

மற்ற செய்திகள்
