VIDEO: இளைஞர்களின் வீடியோவை பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி.. திமுக அரசு மீது கடும் தாக்கு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

பட்டாக்காத்திகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை கைது செய்த காவல்துறையின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. திமுகவினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன.
அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன,அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,(2/3)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 25, 2021
காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை விடியா அரசு நிலைநாட்ட வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
