"இந்த மாதிரி நிறைய.. நிறைய .. நிறைய நடக்குது!".. 'அஜித்' பெயரை தவறாக பயன்படுத்தும் சிலர்!'.. உஷாரான 'தல'!.. உடனே வெளியான அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், ரசிகர்கள் சிலர் தன்னை அரசியலுக்குள் இழுக்க முயன்றதை அறிந்த அஜித், 2011-ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தையே கலைத்துவிட்டு தான் உண்டு வேலை உண்டு என வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அஜித்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற நபர் ஒருவர் அஜித் பெயரை பயன்படுத்தி கல்லூரிகளில் சீட் கேட்டும், வாங்கித்தருவதாகக் கூறியும் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இன்னொரு நபர் அஜித்தின் அடுத்த படத்தை தான் தயாரிக்கவிருப்பதாகக் கூறி பைனான்சியரை அணுகி கோடிக் கணக்கில் கடன் கேட்டதாகவும் தெரிகிறது.
இந்த தகவல்கள் அஜித்தின் காதுகளை எட்டியதை அடுத்து, பல ஆண்டுகளாக தன்னுடன் பணியாற்றிவரும் தன் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதியுடன் பணிபுரியும் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன் சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அஜித் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ தங்களிடம் அணுகினால் அந்த தகவலை உடனடியா சுரேஷ் சந்திராவிடம் தெரிவித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையும் மீறி இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையுடன் செயல்படாமல் இருந்தால், அதற்கு தன் கட்சிக்காரர் அஜித் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார் என்றும் பொது, மக்களும், இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி அஜித் கேட்டுக் கொள்வதாகவும், பரத் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
