"யாரைக் காப்பாற்ற ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்"?.. சித்ரா வழக்கில் அதிரடி திருப்பம்!.. பரபரப்பு குற்றச்சாட்டு!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டி.வி. நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் நேற்று கைது செய்யப்பட்டார்.

பிரபல டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்ன திரையை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் பதிவு திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது.
நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. இன்று விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் யாரைக் காப்பாற்ற என் மகன் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்? என்று அவரது தந்தை ரவிச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவசர கதியில் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர் என்று சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது சித்ராவின் வழக்கில் மேலும் பல வியூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

மற்ற செய்திகள்
