'டீமை விட்டு அவர தூக்கலாம்னு இருந்த நேரம்’... ‘தோனி கொடுத்த வாய்ப்பு’... ‘சரியா யூஸ் பண்ணிக்கிட்டார்’... ‘பாராட்டி தள்ளிய முன்னாள் வீரர்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கும் நிலையிலிருந்த விராட் கோலியை, தோனி காப்பாற்றியது குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
![Sanjay Manjrekar recalls how MS Dhoni backed a young Virat Kohli Sanjay Manjrekar recalls how MS Dhoni backed a young Virat Kohli](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/sanjay-manjrekar-recalls-how-ms-dhoni-backed-a-young-virat-kohli.jpg)
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கும் விராட் கோலி அதற்கடுத்த மூன்று போட்டிகளில் பங்கேற்க மாட்டார் அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதாக அவர் இந்தியா திரும்புகிறார்
விராட் கோலி தற்போது உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆனால் பல வீரர்களைப் போலவே, கோலியும் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஏமாற்றாங்களையே சந்தித்தார். இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 இல் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 76 ரன்களை மட்டுமே அடித்தார்.
இதையடுத்து இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு கோலி தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்குத் திரும்பினார். அங்கு அவர் விளையாடிய ஒரே டெஸ்டில் இரண்டு அரைசதங்களை அடித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கோலி அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் அவரது எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. மெல்போர்ன் மற்றும் சிட்னி முழுவதும் நான்கு இன்னிங்ஸ்களில், கோலி 11, 0, 23 மற்றும் 9 ரன்களையே அடித்தார்.
இந்நிலையில், சோனி ஸ்ஃபோர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ‘கோலி என்றால் அது கோலி தான். அவருக்கு எப்படி ரன் எடுக்க வேண்டும் என்ற வித்தை தெரியும். 2011-2012 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கோலி சதம் அடித்தார். அந்தத் தொடரில் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களில் அவர் மட்டுமே சதமடித்தார். வேறு யாரும் அடிக்கவில்லை. அப்போது கோலிக்கு மிகவும் இளம் வயது. சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின்பு அவரை அணியில் இருந்து நீக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அணியிலிருந்து நீக்கப்படும்நிலையில் இருந்த கோலியை, தோனிதான் காப்பாற்றினார். அவர்தான் கோலியை அணியில் இருந்து தூக்காமல் இருப்பதற்கு உறுதுணையாக இருந்தார். அதன்பின்பு பெர்த் டெஸ்ட் போட்டியில் 70 ரன்கள் எடுத்தார். பின்பு அடுத்தப் போட்டியில் சதமடித்தார். தனக்கு தோனி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நிரூபித்தார் கோலி. அதன்பின்பு 2014-2015 சதங்களை விளாசினார் கோலி’ என்று அவர் கூறியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)