“கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு!... இப்படியே போச்சுனா... நமக்கும் ஒரு ‘பாயாசத்த’ போட்ருவான்!..” - கிம்மின் சகோதரி ‘திடீர்’ மாயம்?.. ‘இதுதான் காரணமா?’
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவின் புதிய தலைவராக கிம் ஜாங் உன்னின் சகோதரி முடிசூட்டுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் திடீரென பொதுவெளியில் தோன்றாமல் மாயமாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக, கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் அவருடைய சகோதரி கிம் யோ , தனது சர்வாதிகார சகோதரரான கிம் ஜாங் உன்னால் பழிவாங்கப்பட்டு விடுவார் என்கிற பயத்தில் அவர் வெளியில் தோன்றாமல் மாயமாகி இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களில் 32 வயதான, கிம்மின் சகோதரி கிம் யோ வடகொரியாவின் முக்கிய பொறுப்புகளுகு கொண்டுவரப்பட்டார். அவருடைய சகோதரருடன் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்பட்ட அவர் தென்கொரியாவுக்கு எதிராக கடுமையான அறிக்கைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் தென் கொரியாவின் முக்கிய உளவுத்துறை நிபுணர்களுள் ஒருவர் கிம் சகோதரியுடன் ஆட்சியை பகிர்ந்துகொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறியிருந்தார்.
இதை அடுத்து ஜூலை 27 முதல், கிம் யோ எந்த பொது நிகழ்ச்சிகளிலும், மக்கள் முன் தோன்றி கலந்து கொள்ளவில்லை எனவும் அவரை பொதுமக்களால் பார்க்க முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது. சகோதரர் கிம் ஜாங் உன்-உடன் அண்மையில் நடந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும், பொலிட்பீரோ உறுப்பினரான கிம் யோ, சமீபத்திய கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. இதனால் வட கொரிய அதிபர் ஆட்சி பொறுப்புக்கு கிம் யோ வரலாம் என்கிற தகவல் பரவியதால் கடுப்பான தனது சகோதரர் கிம் ஜாங்கால், பழிவாங்கப்பட்டு விட நேரும் என்கிற அச்சத்தில் கிம் யோ, மாயமாகி இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கிம் குடும்பத்தின் தாய்மாமனுக்கு நேர்ந்தது தமக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கிம்மின் சகோதரி அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது தமது சகோதரரை விட அதிக செல்வாக்கு கொண்டவராக ஊடகங்களால் தான் சுட்டிக் காட்டப்படுவதை கிம் ஜாங் விரும்ப மாட்டார் என்பதை முன்னறிந்து அவருடைய சகோதரி கிம் யோ இத்தகைய மறைந்து பணிபுரியும் முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. முன்பு வட கொரியாவின் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக திகழ்ந்த கிம்மின் தாய் மாமா, ஜாங்-சாங்-தைக், கடந்த 2013 டிசம்பர் மாதம் மொத்த பொறுப்புகளும் பிடுங்கப்பட்டு, ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலை தமக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று கிம்மின் சகோதரி, தற்போதில் இருந்தே அடக்கி வாசிக்கத் தொடங்கி உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்
