VIDEO: "இன்னைக்கு என்னோட வீட்ட இடிச்சுட்டீங்க... நாளைக்கு உங்க..." - நடிகை கங்கனா ரணாவத் ஆவேசம்!.. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு நடிகை கங்கனா ரணாவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகம், விதிகள் மீறி கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அதனை இடிக்கும் பணிகள் இன்று நடைபெற்றன. அது பாலிவுட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பரபரப்பான சூழலில் தற்போது Y+ பாதுகாப்புடன் மும்பை வந்திருக்கும் நடிகை கங்கனா, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "உத்தவ் தாக்கரே, நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? திரைத்துறை மாஃபியா உடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, எனது வீட்டை இடித்து என்னை பழி வாங்க நினைக்கிறீர்களா? இன்று எனது வீடு தகர்க்கப்பட்டுள்ளது. நாளை உங்கள் ஆணவம் தகர்க்கப்படும். காலம் சக்கரம் போன்றது. எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், "நான் காஷ்மீர் பண்டிதர்கள் பற்றி ஒரு திரைப்படம் எடுப்பேன். தற்போது தான் தெரிகிறது அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று. நான் இந்திய நாட்டிற்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் அயோத்தி குறித்து மட்டும் படம் எடுக்கப்போவதில்லை, காஷ்மீர் பற்றியும் படம் எடுப்பேன்.
இதெல்லாம் நடக்கும் என்று முன்னதாகவே எனக்குத் தெரியும். இதற்கு சில அர்த்தங்கள் உள்ளன. உத்தவ் தாக்கரே... இந்த அராஜகம், கொடூரம், இவை நடந்தது ஒரு வகையில் நல்லது தான். இது எனக்கு உதவியாக இருக்கும். ஜெய்ஹிந்த், ஜெய் மஹாராஷ்டிரா!" என்று கடுமையாக சாடியுள்ளார்.
तुमने जो किया अच्छा किया 🙂#DeathOfDemocracy pic.twitter.com/TBZiYytSEw
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020

மற்ற செய்திகள்
