BOLLYWOOD-ஐ அதிரவைத்த சம்பவம்!.. நடிகை கங்கனா ரணாவத் அலுவலகம் இடிப்பு!.. வலுக்கும் மோதல்!.. மும்பையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் சொன்னதை அடுத்து அவருக்கும் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் அதிகமானது.

அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள கங்கனாவின் அலுவலகத்தில் விதி மீறி கட்டிடங்கள் கட்டப்படுவதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. அதையடுத்து, அந்த வேலைகளைத் தொடர்ந்து செய்வதாகக் கூறி மும்பை மாநகராட்சியினர் இன்று கங்கனாவின் அலுவலகக் கட்டிடத்தை இடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
இது குறித்து டுவிட்டரில் கங்கனா, "பாபரும் அவரது ஆர்மியினரும்... பாகிஸ்தான்" என்றும், "நான் தவறு செய்யவில்லை, எனது எதிரிகள் மீண்டும் மீண்டும் மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் என்பதை நிரூபிக்கிறார்கள்" என்றும் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.
கங்கனா மும்பைக்கு வருவதற்கு முன்பாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் கங்கனாவின் அலுவலக இடிப்பு பணிகளுக்கு தற்போது அதிரடியாக தடை விதித்துள்ளது.
இந்த சம்பவம் பாலிவுட்டிலும், மகாராஷ்டிராவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
