“வேற லெவல் பா இவங்க!”.. ‘விபரீதத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளம் பெண்களை கண்டதும், சீக்கியர்கள் செய்த ‘மனதை உருக்கும்’ காரியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் குளத்தில் உறைந்து பனிக்கட்டியாக இருந்த தண்ணீர் மீது இரண்டு இளம் பெண்கள் நடந்தபோது உறையவைக்கும் அந்த குளிர்ச்சியான தண்ணீரில் தவறி விழுந்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் எழுந்து வர சிரமப்பட்ட அந்த பெண்களுள் Kulbinder Bangar என்கிற பெண்மணியின் மகளும் ஒருவர். இதனால் Kulbinder Bangar உதவி கேட்டு சத்தமிட அந்த பகுதியில் இருந்து ஓடிவந்த சீக்கியர்கள் சிலர், முதலில் மரத் துண்டுகளை வைத்து அந்த இளம் பெண்களை மீட்க முயற்சித்து முடியாமல் தோற்றுப் போயினர்.
இதனால் சமயோஜிதமாக யோசித்து உடனடியாக அந்த சீக்கியர்கள் செய்த செயல் உலக வைரலாகி வருகிறது. ஆம் அந்த சீக்கியர்கள் சற்றும் யோசிக்காமல் தங்களுடைய தலையில் தாங்கள் அணிந்திருந்த பாரம்பரியமிக்க தலைப்பாகையை அகற்றி அந்த தலைப்பாகைகளை ஒன்றாக இணைத்து கட்டி கயிறு போல் ஆக்கியுள்ளனர்.
One of the reasons Sikhs wear a Dastaar (turban) is because it represents a beacon.
In times of need, find someone wearing a Dastaar and they will help you.
This story embodies this spirit in the most Canadian way.
I am so thankful these two women found their way to safety. https://t.co/7xMDZfMIIa
— Jagmeet Singh (@theJagmeetSingh) November 2, 2020
பின்னர் அதனை கொண்டு அந்த இளம் பெண்களை மீட்க முயன்றுள்ளனர். இதுகுறித்து Kulbinder Bangar என்கிற பெண் சீக்கியர்களுக்கு தலைப்பாகை என்பது தங்களுடைய நம்பிக்கை தொடர்பான முக்கியமான விஷயம், ஆனால் ஒரு நொடி கூட அதைப் பற்றி யோசிக்காமல் தண்ணீரில் தவறி விழுந்த பெண்களை காப்பாற்ற அவர்கள் அதை பயன்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
குளிர்ச்சி மிகுந்த அந்த தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட 2 பெண்களுள் யாரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய அவசியம் உண்டாகவில்லை என்று கால்கரி அவசர உதவி குழுவை சேர்ந்தவ stuart brideaux குறிப்பிட்டுள்ளார்