"மத்திய அரசு நிதியால்... தமிழகத்தில் 5 ஆயிரம் கி.மீ சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது!" - தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியவர் பிரதமர் மோடி எனக் கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு நிதியால் தமிழகத்தில் சுமார் 5ஆயிரம் கிலோமீட்டர் சாலை மேம்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக-பாஜக கூட்டணியை சேர்ந்த 13 வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடியின் அயராத உழைப்பால் உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கிறது என்று கூறிய அவர், இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற இந்தியர்களின் கனவை மோடி நனவாக்குவார் எனக் குறிப்பிட்டார்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி நிச்சயம் உதவுவார் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, நொய்யல் ஆற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக அரசின் நலத் திட்டங்களை பட்டியலிட்டுப் பேசிய முதல்வர், அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான் எனக் குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்
