ஷேன் வார்னேயின் 'பச்சை' தொப்பிக்கு இவ்வளவு விலையா...! பிராட்மேனின் 'தொப்பியை' முந்தி உலக சாதனை...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 10, 2020 03:30 PM

ஆஸ்திரேலியாவில் புதர்தீயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நடத்தப்பட்ட ஏலத்தில், அந்நாட்டு கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஷேன் வார்னேயின் தொப்பி 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளது.

So much for the \'green\' hat of cricketer Shane Warne.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் புதர் தீ ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தீயினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்த  ஷேன் வார்னே,   டெஸ்ட்  போட்டியில் தாம் தலையில் அணிந்து ஆடிய பச்சை நிற தொப்பியை ஏலத்தில் விட்டார். அதை  வரலாறு காணாத விலையாக அவருடைய ரசிகர் ஒருவர், இந்திய மதிப்பில் 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கினார்.

இதற்கு முன், முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட்மேனின் தொப்பி 3 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. அதைவிட அதிக விலைக்கு வார்னேயின் தொப்பி தற்போது ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

Tags : #SHANEWARNE #BAGGYGREEN