“பொங்கலுக்கு வேலைக்கு வந்தேன்.. ஆனா”.. ஆவின் ஊழியர் எடுத்த அதிர்ச்சி முடிவு!.. “சட்டைப்பையில் இருந்த” கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 17, 2020 09:47 AM

திண்டுக்கல் அருகே உள்ள மைக்கேல் பாளையத்தைச் சேர்ந்த ஜஸ்டின் திரவியம் என்கிற 38 வயதான நபர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கொதிகலன் இயக்குபவராக பணிபுரிந்து வருகிறார்.

aavin milk society employer attempts suicide ijn dindugal

இவர் நேற்று காலையில் இருந்து சக ஊழியர்களிடம் எதுவும் பேசாமல் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் சக ஊழியர்கள் அதிர்ந்துபோய் அவரை கண்காணித்தனர். அப்போது ஜஸ்டின் திரவியம் அங்கிருந்த அறைக்கு சென்று தான் கொண்டுவந்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால் சக ஊழியர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தை விசாரித்த போலீஸார், சிகிச்சையில் இருந்த ஜஸ்டினிடம் எதுவும் கேட்க முடியாமல் போகவே, அவரது சட்டைப்பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், ‘நான் பொங்கல் பண்டிகை விடுமுறை தினத்திலும் உயர் அதிகாரி வற்புறுத்தியதால் வேலைக்கு வந்தேன். ஆனால் எனது மேலாளர் தினகரன் பாண்டியன், எனக்கு ஒதுக்கிய பணிகளை செய்து முடித்துவிட்டு, இடையில் சாப்பிட சென்றேன். ஆனால் நான் வீட்டுக்கு சென்றுவிட்டதாக சிலர் கூறியதை கேட்டு, என் மேலாளர் என்னை அவதூறாக பேசி, திட்டி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். அதனால் இந்த முடிவை எடுக்கிறேன்’ என்று எழுதியிருந்தது.

இதுகுறித்து பேசிய ஆவின் பால்பண்ணை மேலாளர், இந்த புகாரில் உண்மை இல்லை என்றும், தான் அவதூறாக பேசவில்லை என்றும், ஜஸ்டின் மதிய உணவுக்காக சென்றது தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

Tags : #AAVIN #WORKER #EMPLOYEE