'கோவத்துல குறுக்க இருந்தத மறந்துட்டனே.. இப்ப என்ன ஆச்சு?'. முக்கிய வீரருக்கு '2 வருஷம்'.. தடை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Aug 09, 2019 11:51 AM

சென்ற மாதம் கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெரு அணியை வீழ்த்தி பிரேசில் அணி 3-1 என்கிற கணக்கில் வென்றது. இந்த போட்டியின் இறுதியில் ஒரு 70 நிமிடங்களுக்கு பிரேசில் அணியைச் சேர்ந்த 22 வயது வீரர் கேப்ரியல் ஜீசஸின் காட்டுத்தனமான ஆட்டம், அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வைத்தது.

gabriel jesus handed 2 month ban football CA Final

அதன் பின்னர், கோபமாக வெளியேறிய கேப்ரிய ஜீஸஸ், மைதானத்தில் இருந்த வீடியோ உதவி அம்பயருக்கான மானிட்டர் மற்றும் அதிகாரிகள் அமர்வதற்குமான இருக்கையை எட்டி உதைத்துள்ளார். அதன் பின்னர் நடந்த அந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தார்.

ஆனால் தென்னமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு விட்டுவிடுமா என்ன?  கேப்ரியல் ஜீசஸ் சர்வதேச போட்டிகளில் 2 மாதம் விளையாட தடை விதித்துள்ளதோடு, இதற்கென ரூ.21 லட்சமும், இதைத் தவிர பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்கு விதிமுறையை மீறியதாகக் கூறி அந்த அமைப்புக்கு ஒரு ரூ.10½ லட்சமும் அபராதம் விதிக்கபட்டது.

Tags : #COPA AMERICA #FINALS #FOOTBALL #BAN