'கடை எப்போ சார் திறப்பீங்க...? 'திறந்து உள்ள போய் பார்த்தால்... ' டாஸ்மாக் பின்பக்க பூட்டை உடைத்து...' 'குடி'மகன்கள் வேதனை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 25, 2020 11:06 AM

சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின்பக்க பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Money robbery after breaking rear lock on Tasmac

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள பல்லக்கு நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தினசரி மதியம் 12 மணிக்கு இந்த கடை திறக்கப்பட்டாலும், காலை 9 மணி முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து, மதுவை வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடையின் முன் 'குடி' மகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடையின் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் ஊழியர் ராஜபாண்டி ஆகியோர் மதியம் 12 மணிக்கு வந்து கடையை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது, கல்லா பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த வசூல் பணம் ரூ 14.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. கடையின் பூட்டு உடைக்கப்படாமல் எப்படி கொள்ளையர்கள் உள்ளே வந்தனர் என்று டாஸ்மாக் ஊழியர்கள் பார்த்தனர். அப்போது கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தை கொள்ளையடித்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து உடனே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனே மயிலாப்பூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடை முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும், கடையின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் உடனே மதுவிற்பனை செய்யப்படாததால் மது வாங்க வரிசையில் காத்திருந்தவர்கள் கலக்கமடைந்து நின்றுக்கொண்டிருந்தனர்.

Tags : #TASMAC