'பின்ன.. செஞ்சது என்ன கொஞ்ச நஞ்சமா?'.. நடிகர் சோனு சூட்-டை கவுரவிக்க ‘தேர்தல் ஆணையம்’ எடுத்த அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக அனுஷ்கா நடித்து வெளியான அருந்ததி, படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் சோனு சூட்.
பஞ்சாபின் மொகா மாவட்டத்தில் பிறந்த சோனு , முன்னதாக, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்தோர் சொந்த ஊருக்கு செல்வதற்கு உதவி செய்து மீடியாக்களின் தலைப்பு செய்தியாகவே மாறினார். இதனால் தேசிய அளவில் பலரும் இவரது புகழ் பரவியது.
நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்தோருக்கான வாகன வசதிகளை செய்து கொடுத்தும், வேலை இழந்த ஐ.டி பெண்ணுக்கு உடனடி உதவி செய்தும் மனிதநேயத்துடன் நடந்துகொண்ட இவர் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டார்.
இந்த சூழலில்தான், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய பரிந்துரையில், சோனுவை பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நியமிக்க வேண்டும் என பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ கேட்டு கொண்டுள்ளார். அத்துடன் தேர்தல் ஆணையம் சார்பிலும் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.