‘எதிர்காலத்தில் என்ன நடந்தாலும்’... ‘முதல் முறையாக’... ‘ சூசகமாக ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்’... பரபரப்பு பேச்சு’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜனவரி 20-க்குப் பிறகு அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்து, தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு டொனால்டு ட்ரம்ப் சற்று இறங்கி வந்து உள்ளார்.

நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஐனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர் முதன்முறையாக வெள்ளை மாளிகையில், ரோஸ் கார்டனில் வெள்ளிக்கிழமை அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது ஜனவரி 20-க்குப் பிறகு அவர் அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்து தனது தோல்வியை ஒப்புகொள்ள சற்று இறங்கி வந்துவிட்டார் என்றறே கூறப்படுகிறது. அவரது நிர்வாகம் புதிய கொரோனா வைரஸ் ஊரடங்குகளுக்கு உத்தரவிடாது என்றும் கூறினார்.
ட்ரம்ப் தெரிவித்ததாவது, ‘இந்த நிர்வாகம் ஒரு கொரோனா ஊரடங்கை இனி அறிவிக்காது. எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், அது எந்த நிர்வாகமாக இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? நேரம் தான் பதில் சொல்லும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த நிர்வாகம் இனி ஊரடங்கிற்கு உத்தரவிடப்போவதில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். அடுத்த ஆண்டு வேறு நிர்வாகம் இருக்கக்கூடும். இந்த நிர்வாகம் எந்த சூழ்நிலையிலும் ஊரடங்கு வழியாக செல்லாது. ஆனால் நாம் மிகவும் விழிப்புடன் இருப்போம். மிகவும் கவனமாக இருங்கள் ’ என்று டிரம்ப் கூறினார்.
இதனால் ட்ரம்ப் தற்போது தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். விரைவில் பதவியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாகக் கூறவில்லை என்றாலும், ட்ரம்ப் சூசகமாக கூறி உள்ளார். ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதது வெட்கக்கேடானது என்று தற்போது வெற்றிபெற்ற ஜோ பைடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜோ பைடன் வெற்றிக்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்காமல் இருந்த சீனாவும், ஒருவார காலத்திற்குப் பின்னர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
