‘கொரோனாவால வேலை போச்சா’..‘கவலைப்படாதீங்க எங்க கம்பெனிக்கு வாங்க, நல்ல சம்பளம் தாரோம்’.. பிரபல நிறுவனம் அசத்தல்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸால் வேலை இழந்தவர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ஷாப்பிங் உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கு தங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் தெரிவித்துள்ளார். அதில், உலகப் பொருளாதாரம் இந்த கொரோனா நோய் தொற்றால் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் உலகின் எல்லா தொழில்துறைகளும் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி அளவு குறைவாகவே உள்ளது.
நோய்தொற்று காரணமாக மக்கள் வெளியில் வருவதற்கு பயந்து வீட்டுக்குள் இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், மக்கள் எங்களை போன்ற ஆன்லைன் நிறுவனங்களைதான் பெரிதும் நம்பி இருக்கின்றனர். எங்களுக்கு அந்த பொறுப்பும், பயமும் இருக்கிறது. எந்த ஒரு பொருளும் அதே நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அதே நாட்டில் விற்கப்படுவதில்லை. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான நாடுகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்த செய்ய எங்கள் ஊழியர்கள் தவறியதில்லை. எங்கள் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற நிறைய ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். அதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்கள் தாராளமாக எங்களுடன் இணைந்து பணியாற்றலாம். நாங்கள் நல்ல சம்பளம் தர தயாராக இருக்கிறோம். நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தற்காலிகமாக எங்களுடன் சேர்ந்து உதவலாம் என அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.