“மோடி மாதிரிலாம் என்னால ஊரடங்கு உத்தரவு போட முடியாது!”.. “காரணம் இதான்!”.. இம்ரான் கான் வேதனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் மொத்தம் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கராச்சியில் 123 பேருக்கும் சுக்குர் பகுதியில் 210 பேருக்கும் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. சிந்து மாகாணத்தில் மட்டும் 41 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போன்றோர் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தலாம். ஆனால் அதே சமயம் என்னால் முடியாது. அவ்வாறு அறிவித்தால் எங்கள் நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடும். எங்களது நாட்டிலும் கொரோனாவின் மரணப்பிடியில் மக்கள் அல்லல்படுகிறார்கள்" என்று வேதனை தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சீனாவில் படிப்படியாக இந்த நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தாலியில் இந்த நோய் பெருமளவில் பரவியதுதோடு அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தானில் 25 சதவீத மக்கள் தினக்கூலியை நம்பி இருப்பதாகவும் எனவே பாகிஸ்தானில் முழுஅடைப்பு சாத்தியமில்லை என்றும் தெரிவித்ததோடு நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுவதாகவும் முழு அடைப்பால் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்றும் மக்களின் துன்பத்தை குறைப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமூகத்தில் இருந்து விலகுதல், சுயமாக தனித்திருத்தல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்படுத்துதல் முறைகளை வரவேற்பதாக கூறிய இம்ரான்கான் தேவையற்ற செய்திகளை பரப்பி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும் தன் நாட்டு மக்கள் மற்றும் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டார்.
