'நாம பெரிய ஆளா இருந்தாலும்'...'நம்ம பையன் சார் அவன்'... சென்னை வீரரை கொண்டாடும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 11, 2019 10:17 AM

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற  2வது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் செயலை பலரும் ஜென்டில்மேன் விளையாட்டிற்கு இதுதான் மிகப்பெரிய உதாரணம் என கொண்டாடி வருகிறார்கள்.

Suresh Raina ties Rishabh Pant\'s laces wins hearts

நேற்றைய போட்டியில் ஓரளவிற்கு நிலைத்து நின்று ஆடிய ரிஷப் பண்ட் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்டின் ஷூ லேஸ் அவிழ்ந்தது.இந்நிலையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரெய்னா இதனை கவனிக்க, ஓடி வந்து பண்டின் ஷூ லேஸை கட்டிவிட்டார்.ரிஷப்க்கு சுரேஷ் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.ஐபிஎல் நிர்வாகமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளது.

அனுபவம் மிக்க வீரரான ரெய்னா,வயதிலும் அனுபவத்திலும் மிகவும் இளம் வயதான ரிஷப் பண்ட்க்கு லேஸ் கட்டியதை பலரும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளனர்.சின்ன தல எப்போதுமே கிரேட் என ரசிகர்கள் கொண்டடி வருகிறார்கள்.