மீண்டும் அணிக்கு திரும்பிய தமிழக வீரர்..! வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 28, 2019 10:47 AM

விஜய் சங்கரின் காயம் குணமடைந்துவிட்டதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

World Cup 2019: Vijay Shankar return to training

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகான உலகக்கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அனைத்து  நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். வரும் ஜூன் 5 -ம் தேதி இந்திய அணி உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. அதற்கு முன்னதாக நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

முன்னதாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களில் வெளியேறியதும், அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்களும் தொடர்ந்து அவுட்டானதால் அதிக ரன்களை சேர்க்க இந்திய அணி தவறியது. ஆனாலும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் வங்க தேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது. மேலும் பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் ஏற்பட்ட விஜய் சங்கர், நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. தற்போது அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #ICC #VIJAYSHANKAR