‘நம்பிக்கை இருக்கு நான் கண்டிப்பா அத செய்வேன் சபதம் எடுத்த மலிங்கா’.. அப்படி என்ன விஷயமா இருக்கும்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 27, 2019 04:58 PM

உலகக்கோப்பை போட்டியில் மீண்டும் தன்னால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த முடியும் என்று இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

malinga says he has confidence of taking hat trick in WC 2019

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து, உலகக்கோப்பை குறித்து இலங்கை அணியில் இடம் பெற்றுள்ள மூத்த வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா மனம் திறந்துள்ளார்.

இந்நிலையில், மலிங்கா கூறியதாவது, ‘கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் ஒரு ஓவரில் 4 பந்துகளில் தொடர்ந்து விக்கெட் எடுத்துள்ளார். இதையடுத்து, அதேபோல் இந்த உலகக்கோப்பையிலும் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து, ஐசிசி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மலிங்கா பேசியுள்ளார்.

அதில், இங்கிலாந்தில் நான் மிகவும் ரசித்து விளையாடுவேன் எனவே என்னால் பந்துவீச்சில் பல்வேறு சோதனைகளை செய்துபார்க்க முடியும். இந்நிலையில், இங்கிலாந்தில் விக்கெட் வீழ்த்துவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது. மேலும், எனக்கு விக்கெட் எடுக்கும் திறமையும், நம்பிக்கையும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும், இம்முறை இலங்கை அணியில், பல இளம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில், நிச்சயம் ரசிகர்கள் அறியும்படி மற்றும் ரசிக்கும்படி அவர்கள் விளையாடுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளதாக மலிங்கா தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #SRILANKA #MALINGA