‘ரொம்ப நாள் எதிர்பார்த்தேன்’.. ‘இப்போதான் கனவு நெஜமாயிருக்கு’.. உலகக் கோப்பை குறித்து தமிழக வீரர் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 16, 2019 06:43 PM

உலகக் கோப்பை தொடரில் தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார்.

World Cup 2019: It has been a dream for me, Says Dinesh Karthik

12-வது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் உலகக் கோப்பையில் விளையாடும் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் அம்பட்டி ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் உலகக் கோப்பையில் விளையாட இடம் கிடைத்தது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார். அதில், ‘உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற எனது வெகுநாள் கனவு நனவாகியுள்ளது’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #CWC19 #MENINBLUE #DINESHKARTHIK