டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Apr 16, 2019 05:25 PM

டிக் டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. 

Central government asks Apple & Google to take down Tik Tok app

டிக் டாக் மொபைல் செயலிக்கு தடை விதிக்குமாறு கடந்த 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் டிக் டாக் செயலியை தத்தமது பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலியை இந்தியாவில் நீக்கியுள்ளது.

முன்னதாக தங்கள் தளத்தில் இருந்த விதிமுறைகளை மீறிய 60 லட்சம் பதிவுகளை நீக்கிவிட்டதாக டிக் டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் 13 வயதுக்கு மேற்பட்டவர்களே இச்செயலியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விகாரத்தில் அரசின் விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் டிக் டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #TIKTOK #TECHNOLOGY #GOOGLE #APPLE #BAN #INDIA