‘இனி உலகக் கோப்பையிலும் நம்ம விசில் சத்தம்தான்’.. இடம் பிடித்த 3 சிஎஸ்கே வீரர்கள்.. கொண்ட்டாடத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 15, 2019 04:27 PM

வரயிருக்கும் உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Three CSK players in India world cup squad 2019

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான 12-வது உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. முன்னதாக நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையில் விளையாடும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

இந்நிலையில் உலகக் கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கேப்டனாக விராட் கோலி, துணை கேப்டனாக ரோகித் ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி உள்ளிட்டோர் உள்ளனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் கேதர் ஜாதவ் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர். மேலும் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்தி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #IPL2019 #ICCWORLDCUP2019 #MSDONI #WHISTLEPODU #YELLOVEAGAIN