'நாங்க இருக்கோம்'...'அசத்திய தமிழக வீரர்கள்'...வெளியானது உலகக்கோப்பை பட்டியல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 15, 2019 03:40 PM
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்த உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்களின் பட்டியலை,இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் கூடிய இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு,தீவிர ஆலோசனைக்கு பிறகு உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும்,ரோஹித் சர்மா துணை கேப்டனாகவும் செயல்படுவார்.
இந்திய வீரர்களின் பட்டியல்
விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா. தினேஷ் கார்த்திக்
BREAKING: India have named their #CWC19 squad! pic.twitter.com/mMXt5kAG6Y
— Cricket World Cup (@cricketworldcup) April 15, 2019
