'பேச்சாடா பேசுன'...'கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன'...3 நாளுல சந்திப்போம்னு சொன்னியே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 10, 2019 10:43 AM

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்,தொடரின் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள் சென்னை ரசிகர்கள்.

After winning the match against KKR,CSK tweets goes viral

சென்னையில் நேற்று நடந்த 23வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்களை சென்னை பௌலர்கள் தெறிக்க விட்டார்கள்.இதனால் கொல்கத்தா அணி 100 ரன்களை கடக்குமா என்கிற சந்தேகமே எழுந்தது.

இந்நிலையில்  கொல்கத்தா அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆண்டிரு ரசல் மட்டும் அரைசதம் அடிக்க,கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது.மிகவும் எளிதான இலக்கு என்பதனால் போட்டி விரைவில் முடிந்து விடும் என ரசிகர்கள் நினைக்க,சென்னை வீரர்கள் போட்டியை  ஜவ்வாக இழுத்தனர்.இதையடுத்து 17.2 ஓவரில் சென்னை அணி, 3 விக்கெட்டுக்க் 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனிடையே சென்னை வீரர்களும் ரசிகர்களும் ட்விட்டரில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.போட்டி தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு கொல்கத்தா அணி மூணு நாளுல சந்திப்போம் என ட்விட் செய்திருந்தார்கள்.அதற்கு நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு ''நைஸ் மீட்டிங் யூ''என நக்கலாக பதிலளித்துள்ளது சென்னை அணி.மேலும் சென்னை வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.