'அப்பா ஒரு கட்சி...மனைவி வேற கட்சி'...பிரபல வீரரின் குடும்பத்திற்குள் புகுந்த அரசியல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 16, 2019 03:11 PM

அப்பாவும்,மனைவியும் வெவ்வேறு கட்சியில் இணைந்திருப்பதால்,ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியுள்ளனர்.

Sister, father in Congress, cricketer Jadeja backs BJP

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்பவர் ரவீந்திர ஜடேஜா. ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், நேற்று அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி ரிவாபா கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார்.அதோடு தற்போது நடந்துவரும் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜடேஜாவின் குடும்பம் தற்போது முழுவதுமாக அரசியலில் இறங்கியுள்ளது.யாரும் எதிர்பாராத வகையில்,ஜடேஜாவின் தந்தையும், சகோதரியும் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

இதனிடையே தான் பாஜக-வுக்கு ஆதரவளிப்பதாக ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அக்கட்சியின் சின்னத்தை பதிவிட்டு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அவரது குடும்பம் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியுள்ளது.