இந்திய அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பிசிசிஐ..! வைரலாகும் போட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 28, 2019 09:13 PM
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது.

12 -வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் நியூஸிலாந்து உடனான போட்டியை தவிர(மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது) அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2 -ம் இடத்தில் இருந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை(30.06.2019) உலகக்கோப்பை லீக் சுற்றின் அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
இப்போட்டியின் போது இந்திய அணி புதிய ஜெர்சியுடன் விளையாடும் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஐசிசி விதிகளின் படி இரு அணிகளும் ஒரே நிற உடையுடன் விளையாட கூடாது என கூறப்படுகிறது. மேலும் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடப்பதால் அந்த அணி ஜெர்சியை மாற்ற வாய்ப்பு இல்லை. அதனால் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆரஞ்சு நிற புதிய ஜெர்சியின் புகைப்படத்தை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Presenting #TeamIndia's Away Jersey 🤩🤩🇮🇳🇮🇳 What do you make of this one guys? #TeamIndia #CWC19 pic.twitter.com/TXLuWhD48Q
— BCCI (@BCCI) June 28, 2019
