‘சிறப்பாக விளையாடுவதற்கு நான் மட்டுமே காரணம்..’ வெற்றிக்குப் பிறகு பேசியுள்ள இந்திய வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 28, 2019 05:35 PM

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

I give full credit to myself says Mohammed Shami

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சேர்க்கப்பட்டார் முகமது ஷமி. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அணியில் சேர்க்கப்பட்டார். இதிலும் சிறப்பாக பந்துவீசிய அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், “நான் கடந்த 18 மாதங்களாக உடல் ரீதியான பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள் என பலவற்றையும் தனியாகவே சந்தித்து வந்துள்ளேன். அதனால் தற்போது நான் நன்றாக விளையாடுவதற்கு நான் மட்டுமே காரணம். நாட்டுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே இப்போது எனது முழு கவனமும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #INDVSPAK #INDVSWI #INDVSENG #TEAMINDIA #MOHAMMADSHAMI