'மொத்த ஆட்டத்தையும்'.. ஒரு செகண்டில் மாற்றிய .. 'வேற லெவல் கேட்ச்'.. வெற்றி வாகை சூடிய வெண்டீஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 05, 2019 08:56 AM

உலகக்கோப்பை போட்டியில் நிகழும் அற்புதங்களில் மிக முக்கியமானவையாக கேட்ச்கள் கருதப்படுகின்றன. 

West indies player Fabian Allens stunning catch goes viral

நடப்பு உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி, மோதிய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஃபேபியன் ஆலன் பிடித்த கேட்ச்தான், அந்த அணியின் வெற்றியை கடைசி 23 ரன்கள் வித்தியாசத்தில் உறுதிப்படுத்தியது என்று சொல்லலாம்.

288 ரன்கள் எடுத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி இன்னும் 23 ரன்கள் என்கிற இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதுதான் இந்த கேட்ச் நிகழ்ந்தது. முன்னதாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இருந்து 4வது ஆர்டரில் களமிறக்கப்பட்டிருந்தார் ரிஷப் பந்த். இவர் அடித்த பந்தை, இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோக்ஸ் தாவிப்பிடித்து, காற்றில் பறந்து, பிடித்த கேட்ச் வைரலானது.

இதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக  ஃபேபியன் ஆலன் பறந்து பிடித்த இந்த கேட்ச், கடைசி நிமிட ஆட்டத்தின் போக்கையே மாற்றி பரபரப்பை ஏற்படுத்தியதாலும், பார்ப்பவர்களை உறையவைத்ததாலும், இந்த உலகக் கோப்பை சீசனின் Finest Catch-ஆக கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.