‘தல’ தோனி ஸ்டைலில் சச்சினுக்குப் பதிலளித்த சுந்தர் பிச்சை..! வைரலாகும் ட்வீட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 04, 2019 02:47 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியை சச்சின் டெண்டுல்கர், கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையுடன் சேர்ந்து பார்த்தார்.

Sundar Pichai responds like MS Dhoni to Sachins tweet

அந்தப் போட்டியின்போது சுந்தர் பிச்சையுடன் எடுத்த புகைப்படத்தை  ட்விட்டரில் பகிர்ந்துள்ள சச்சின், “என்ன அழகான (சுந்தர்) ஃபோட்டோ?” எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு சுந்தர் பிச்சை, “மாஹி பாய் சொல்வது போல ‘பஹுத் படியா’ உங்களுடன் சேர்ந்து ஆட்டத்தைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. சிறந்த நினைவுகளை எடுத்து வந்துள்ளேன் அடுத்தமுறை பார்ப்பதுவரை” என பதில் ட்வீட் செய்துள்ளார்.

தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது பந்துவீச்சாளர்களை ஊக்குவிப்பதற்காக மிகவும் சிறப்பு என அர்த்தம் தரும் ‘பஹுத் படியா’ என்ற வாக்கியத்தைக் கூறுவது வழக்கம். தோனி போல சச்சினுக்கு சுந்தர் பிச்சை பதிலளித்துள்ள இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSENG #SACHINTENDULKAR #SUNDARPICHAI #MSDHONI #VIRALTWEET