'இடி விழுந்தாலோ.. மின்னல் தாக்கினாலோ'.. அதுக்கு சான்ஸ் இருக்கு.. 'இப்டியா வெச்சு செய்றது'.. கிரிக்கெட் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 04, 2019 10:48 PM

செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்து அணியும் மோதிக்கொண்ட உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

mohammed yusuf jokes about PAKvBAN - ICCCricketWorldCup2019

இங்கிலாந்தின் இந்த வெற்றி, பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புகளுக்கு விழுந்த பெரிய துண்டு என்று கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படும் சூழலில், பங்களாதேஷ்க்கு எதிராக பாகிஸ்தான் அணி குறைந்தது 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் அந்த அணி உள்ளது.

இந்த நிலையில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர், முகமது யூசப் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேசியபோது, பாகிஸ்தான் அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது என்பதுதான் உண்மை நிலை என்றும், அதையும் மீறி, பங்களாதேஷ் அணியின் மீது இடி விழுந்தாலோ, அந்த அணி வீரர்கள் அனைவரும் விளையாட முடியாத அளவுக்கு உடல் தகுதியை இழந்தோலோ, ஒருவேளை ஓவருக்கு 10 ரன்கள் எடுத்தாலே போதும் என்கிற நிலை பாகிஸ்தானுக்கு உருவானாலோதான் பாகிஸ்தான் தகுதி பெறும் என்பது சாத்தியம் என்று கூறியுள்ளார்.

மேலும், எவ்வளவு மொக்கையான அணியுடன் ஆடினாலும் 316 ரன்கள் எடுப்பது சாத்தியமில்லாதது. ஆக, எதிரணியை மின்னல் தாக்குதவதைத் தவிர வேறு வழியில்லை என்று முகமது யூசப் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #MOHAMMEDYUSUF #PAKISTAN