'காயத்தில் சிக்கிய இளம் வீரர்'... 'தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்பு'... இணையும் புதிய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 04, 2019 09:04 AM

காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில், இளம் வீரர் பிருத்வி ஷா பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Prithvi Shaw has been ruled out of the one-day series against West Ind

மேற்கிந்தியத் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி,அந்நாட்டு ஏ அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலில் பிருத்வி ஷா, ரிஷாப் பன்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

வரும் 11 ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்த தொடரில், தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் காரணமாக  தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு என்ன காயம் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே உலகக்கோப்பை தொடரில் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக, ரிஷாப் பன்ட்டும், விஜய் சங்கர் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்குப் பதிலாக இந்திய ஏ அணியில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்தது. தற்போது காயம் காரணமாக பிருத்வி ஷா விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : #CRICKET #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #WORLDCUPINENGLAND #PRITHVI SHAW #WEST INDIES A #ONE-DAY SERIES