‘கிரிக்கெட் சரித்திரத்துலயே’ நடக்காத ஒன்னு நடந்தா.. ‘பங்களாதேஷ் மனசு வச்சா’.. அரையிறுதிக்கு இந்த டீம் வர வாய்ப்பு இருக்கு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 04, 2019 01:07 PM

உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தானுக்கு சில சாத்திய கூறுகளே உள்ளன.

Pakistan\'s semi finals qualification scenarios explained

இதுவரை நடந்து முடிந்த உலகக்கோப்பை லீக் சுற்றின் மூலம் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. இதில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய நியூஸிலாந்து அணி கடைசியாக சில போட்டிகளில் சொதப்பியதன் மூலம் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 -வது இடத்தில் இருந்து வருகிறது.

அதேபோல் முதல் பாதியில் சொதப்பி வந்த பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் 5 -வது இடத்தில் இருந்து வருகிறது. உலகக்கோப்பை லீக் சுற்றுகள் முடிய இன்னும் 4 போட்டிகளே உள்ளன. இதில் நியூஸிலாந்து அணி 9 போட்டிகளில் விளையாடிவிட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு இன்னும் போட்டி மிச்சம் உள்ளது. ஒருவேளை அப்போட்டியில் பாகிஸ்தான் அதிக ரன்ரேட்டில் வெற்றி பெரும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுவிடும்.

அதிக ரன் ரேட் என்பது சாதாரணமாக இல்லை 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். உதாரணமாக பாகிஸ்தான் அணி 400 ரன்கள் எடுத்தால் வங்கதேசத்தை 84 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்து 316 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுவும் வங்கதேச அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு அவ்ளோதான். இதனால் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் வங்கதேச அணி ஒருவேளை சொதப்பினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #PAKVBAN #SEMIFINAL #PAKISTAN #PCB