‘உலகக் கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவரு தான்..!’ புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 21, 2019 06:05 PM

உலகக் கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டு மஹேந்திர சிங் தோனியே என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ms dhoni will be the trump card of india in worldcup says zaheer abbas

தோனி குறித்துப் பேசியுள்ள அவர், “இந்தியா தோனி என்ற ஜீனியஸை அணியில் கொண்டுள்ளது. இந்திய அணியின் மூளை அவர். ஏற்கெனவே இரண்டு உலகக் கோப்பைகளில் வென்ற அணியை வழிநடத்தியவர் என்பதால் இந்த ஆட்டத்தைப் பற்றி நன்றாக அறிந்தவர். அவருடைய அனுபவம் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் கண்டிப்பாக உதவும். தோனியே உலகக் கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி பற்றிப் பேசியுள்ள அவர், “அதேநேரம் விராட் கோலி தலைமையிலான முதல் உலகக் கோப்பை இது என்பதால் அவரும் தன்னைக் கேப்டனாக நிரூபிக்க முயற்சிப்பார். சிறப்பான பேட்டிங் வரிசை கொண்ட இந்தியாவிற்கு இங்கிலாந்தின் ஆடுகளமும் சாதகமாகவே அமையும். இந்திய அணி 400 முதல் 450 ரன்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #INDIA #TRUMPCARD #MSDHONI