‘என்ன நடந்தாலும் சரி தோனி எங்களுக்கு வேணும்..’ அவர் சொல்றத தான் நாங்க கேப்போம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 21, 2019 01:13 PM

இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் வீரர்கள் பலரும் சக வீரர்கள் மற்றும் போட்டி குறித்து கருத்துத்  தெரிவித்து வருகின்றனர்.

whatever happens we still need MS Dhoni says Yuzvendra Chahal

சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணிவீரர் யுவேந்திர சாஹல் தோனி குறித்த கேள்விக்கு, “என்ன நடந்தாலும் எனக்கும் குல்தீப்பிற்கும் மஹிபாய் தேவை. அவர் சொல்வதையே நாங்கள் எப்போதும் கேட்போம். நாங்கள் தொடக்கத்தில் வந்தபோது எப்படி இருந்ததோ இப்போதும் அப்படித்தான். நாங்கள் தனியாக ஏதாவது திட்டமிட்டால் கூட அதைப் பற்றி அவரிடம் பேசி விட வேண்டும் என்றே நினைப்போம்” எனக் கூறியுள்ளார்.

யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணியில் சேர்ந்த தொடக்கத்திலிருந்தே தோனி அவர்களுக்கு உதவியாக ஆட்டம் குறித்த அறிவுரைகளை வழங்கி வருகிறார்.  சில நாட்களுக்கு முன்பு குல்தீப், “தோனி கொடுக்கும் டிப்ஸ்கள் பல நேரங்களில் தவறாக இருக்கும். ஆனால் அது பற்றி அவரிடம் கேட்கவும் முடியாது” எனக் கூறியதாகத் தகவல் வெளியானது. பின்னர் அதை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #DHONI #MAHIBAI