'உலகக் கோப்பையை இந்தியா வெல்வதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை'.. உலகப்புகழ் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 21, 2019 01:10 PM
இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை போட்டியுடன் தொடர்புபடுத்தி மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரெய்ன் லாரா கூறியுள்ள வைரல் கமெண்ட் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு, இந்திய வீரர்களை கவுரவப்படுத்தியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை, பொதுவாகவே அனைத்து வகையிலான தனது சிறப்பான ஆட்டத்தையும் முன்னதாக தந்திருப்பதாகவும், பேலன்ஸ் செய்து அணியை வழிநடத்தி ஆடும் விராட் கோலியின் தலைமையிலான சிறந்த அணியாக இந்திய அணி தற்போது திகழ்வதாகவும் கூறியுள்ள பிரெய்ன் லாரா, வேகம்-விவேகம் இரண்டும் சேர்ந்த மூத்த வீரர்களும் இளைய வீரர்களும் ஒருசேர அமையப்பெற்றிருக்கும் இந்திய அணி இன்னும் வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உலகம் முழுவதும் உள்ள பிரெண்டன் மெக்கல்லம், பென் ஸ்டோக்ஸ் மற்றும் பல புகழ்பெற்ற கிரிக்கெட் பிரபலங்கள் இந்திய வீரர்களான கோலி, தோனி உள்ளிட்டோரை பற்றி பாசிட்டிவாக பேசி ஊக்கம் தந்தும், இந்திய ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஒருவேளை 3-வது முறையாக உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றினால், அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் இந்தியா வலுவான அணி என்பதில் சந்தேகமே இல்லை என்றும் பிரெய்ன் லாரா இந்திய உலகக் கோப்பை அணியை புகழ்ந்துள்ளார். லாராவின் இந்த புகழாரத்தை ரசிகர்களும், இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர்.
