‘இப்டி நடக்கும்ணு யாரும் நெனச்சிருக்க மாட்டீங்க’.. தோனி, ராகுல் ருத்ரதாண்டவம்! மிரண்டு போன வங்கதேசம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 28, 2019 07:37 PM

தோனி, ராகுலின் அதிரடியான ஆட்டத்தால் வங்கதேச அணிக்கு இந்தியா இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

ICC World cup 2019: IND vs BAN warm up match

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதான பயிற்சி ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் நியூஸிலாந்து அணியுடான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா குறைவான ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று(28.05.2019) கார்டிஃப் மைதானத்தில் வங்கதேச அணியை இந்திய எதிர்கொள்கிறது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது. அதின்படி பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா 19 ரன்களிலும், தவான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 47 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். காயத்திற்கு பிறகு இந்த போட்டியில் களமிறங்கிய விஜய் சங்கர் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் கே.எல்.ராகுல் 99 பந்துகளில் 108 ரன்களும், தோனி 78 பந்துகளில் 113 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.