‘நல்லா கேட்டு கோங்க இப்டிதான் பந்துவீசனும்! பவுலிங் ரகசியத்தை சொல்லிக்கொடுத்த மலிங்கா’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 28, 2019 06:11 PM
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது பந்துவீச்சு ரகசியங்களை ஆஸ்திரேலியா அணி வீரரிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதையடுத்து, உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது பந்துவீச்சு ரகசியங்களை ஆஸ்திரேலியா அணி வீரரிடம் பகிர்ந்து கொண்ட விடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டிக்கு பின்னர் மலிங்கா ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஸ்டோனிஸூக்கு தனது பந்துவீச்சு குறித்த சில டிப்ஸ்களை அவருக்கு கொடுத்தார். இது குறித்து கருத்து தெரிவித்த மலிங்கா “ஐ.பி.எல் போட்டிகளில் நான் எப்படி பந்துவீசிய விதம் குறித்து ஸ்டோனிஸ் அறிந்து கொள்ள விரும்பினார்.
மேலும், பந்துவீச்சில் உள்ள வேறுபாடுகள் மிகவும் முக்கியம். மெதுவாக பந்துவீசுவது எப்படி என்று சில டிப்ஸ்களை அவருக்கு கொடுத்தேன். இதன் மூலம் கிரிக்கெட்டை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
Even after a heavy defeat, Lasith Malinga stuck around to teach Marcus Stoinis the secrets of his slower ball 👏 #SpiritOfCricket #CWC19 pic.twitter.com/xKtr1sJBfP
— Cricket World Cup (@cricketworldcup) May 27, 2019
