'சாதாரணமா நினைக்காதீங்க'... அப்புறமா 'சோலிய முடிச்சு விட்டுட்டு போய்டுவாங்க' !
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | May 28, 2019 11:22 AM
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று நடைபெறும் நிலையில்,பேட்டிங் வரிசையை சரி செய்யும் முயற்சியில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.பேட்டிங்யில் இந்திய அணி சொதப்பியதால் இந்திய அணி 179 ரன்களுக்கு சுருண்டது.ரவீந்திர ஜடேஜா மட்டும் அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார்.இது இந்திய அணி மீது கடும் விமர்சனங்களை எழுப்பியது.இதனிடையே இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.
இன்றைய போட்டியில் பேட்டிங் வரிசையை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.அதே போன்று பங்களாதேஷ் அணி தானே என்ற மெத்தனமும் வேண்டாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஜடேஜா தவிர,ஹர்திக் பாண்ட்யா மட்டும் 30 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.முக்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் நடையைக் கட்டி அதிர்ச்சி அளித்தார்கள்.
இதனிடையே நான்காம் நிலை வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இந்நிலையில் பந்து வீச்சில் மட்டும் இந்திய வீரர்கள் ஜொலித்தார்கள்.பும்ரா 4 ஓவரில் 2 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.மேலும் ஷமி மற்றும் ஜடேஜா அபாரமாக பந்து வீச பாண்ட்யாவும், சஹாலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
முன்னதாக பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.