'தல'யோட சாதனையை'... 'இவர் அடிச்சு தும்சம் பண்ண போறாரு'... 'எதிர்பார்ப்பில் ரசிகர்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 27, 2019 11:00 AM

உலகக்கோப்பை தொடரில் இன்று நடக்கும் போட்டியில் தோனியின் சாதனையை அதிரடி வீரர் ரோஹித் சர்மா முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma is just 2 sixes away from breaking Dhoni’s most sixes

நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் ஹிட் மேன் என அழைக்கப்படும் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக சதமடித்து அசத்தினார். இதனிடையே இன்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் சிக்சர் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருக்கிறார். அவர், 345 போட்டிகளில் 225 சிக்சர்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா, 210 போட்டிகளில் 224 சிக்சர்களை விளாசியுள்ளார்.இன்றைய போட்டியில் ரோஹித் 2 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். சர்வதேச அளவில் 4 இடத்தை பெறுவார்.

எனவே இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா அந்த சாதனையை படைப்பார் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Tags : #CRICKET #MSDHONI #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #WORLDCUPINENGLAND #INDIA VS WEST INDIES #ROHIT SHARMA #ODI RECORD