‘வைரலாகும் பிரபல வீரரின் விக்கெட் வீடியோ..’ கலாய்த்து பதில் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 26, 2019 05:31 PM

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் தென் ஆப்பிரிக்க அணியின் இம்ரான் தாஹிர்.

CSK Imran Tahirs wicket celebration video goes viral

இம்ரான் தாஹிர் எப்போதுமே விக்கெட் வீழ்த்திய பிறகு சிறிது தூரம் ஓடி அதைக் கொண்டாடுவது வழக்கம். இதனால் ஐபிஎல் தொடரின் போது இவருக்கு சென்னை அணியினர் ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ எனப் பெயர் வைத்துள்ளனர். உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்திய இம்ரான் தாஹிர் மகிழ்ச்சியில் ஓடியுள்ளார்.

இதைக் கலாய்த்து பாகிஸ்தான் நாட்டு விளையாட்டுத் தொகுப்பாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இம்ரான் தாஹிர் உலகம் முழுவதும் ஓடுவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவிற்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டுள்ளது.

அந்தப் பதிவில், “ஓடினேன் ஓடினேன்! பராசக்தி எக்ஸ்பிரஸ்” என இம்ரான் தாஹிரை டேக் செய்து, சிவாஜி கணேசன் கூறும் ‘ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்’ என்ற வீடியோவையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

 

Tags : #ICCWORLDCUP2019 #CHENNAISUPERKINGS #CSK