'எல்லா கோட்டையும் அழிங்க'.. வீரர் எடுத்த அதிரடி முடிவு.. ஆச்சர்யமாகக் கேட்ட கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 27, 2019 04:43 PM

யுனிவெர்சல் பாஸ் என்று கிரிக்கெட் உலகத்தால் புகழ்ந்து பேசப்படும் கிரிஸ் கெயில், எப்போது ஆக்ரோஷமாக ஆடி, பந்துவீச்சாளர்களை திணறடிப்பவர். உலகின் பல முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் தொடங்கி, பல நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களும் கெயிலுக்கு ரசிகர்கள் என்றால் மிகையல்ல.

wants to play Test match against india after WC2019, gayle

மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிராக இந்தியா இன்று விளையாடுவதற்கு முன்புவரை, மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த உலகக் கோப்பையில் தொடர் வெற்றிகளைக் குவிக்க முடியாமல், ஒரே ஒரு வெற்றியுடன் 8வது இடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் இன்றைய உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பேட்டி அளித்த கெயிலின் பேச்சு கிரிக்கெட் உலகத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதன்படி, உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்த கெயில், தற்போது, மீண்டும் தனது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் தொடரிலும், அதன் பின்னர் நடக்கவுள்ள ஒரு நாள் தொடரில் விளையாட பச்சை சிக்னல் காட்டியுள்ளார். ஆனால் அதே சமயம் டி20 போட்டிக்கு ரெட் சிக்னல் காட்டியுள்ளார்.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாண்டுவரும் கிறிஸ் கெயிலின் கோரிக்கையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்குமா என்பது குறித்து பொருத்திருந்துதான் பார்க்க முடியும். அந்நாட்டு அணியின் கேப்டன், ‘அப்டியா சொன்னார்? இப்படிச் சொன்னது குறித்து, தனக்கு எதுவும் தெரியாது’ என்றும், அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது சிறப்பான ஒன்றுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.